முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது - உள்ளாட்சி தேர்தல், குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

தமிழக சட்டசபையில் 2019- ம் ஆண்டுக்கான கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி கூடியது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தனது உரையை வாசித்தார். அதைத் தொடர்ந்து ஜனவரி 4-ம் தேதிமுதல் 8-ம் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. அதில் 2019-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான பொதுவிவாதம்,தமிழக சட்டசபையில் 5 நாட்கள் நடைபெற்றது.

28-ல் சட்டசபை கூடுகிறது

இதையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக மீண்டும் வரும் 28-ம் தேதி சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை சட்டமன்ற செயலாளர் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். முதல் நாளான 28-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி உறுப்பினர் ராதாமணி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு அவை ஒத்திவைக்கப்படும்.  இதைத் தொடர்ந்து மானியக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும், தி.மு.க. முன்வைத்த சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவை குறித்து சட்டசபையின் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.  அதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டம் அவருடைய அறையில் இன்று பகல் 12 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்று மாலைக்குள் தமிழக சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தெரிந்து விடும்.

அமைச்சரவை கூட்டம்

முன்னதாக இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய  நிலைமை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து