முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் 2319 பேருக்கு ரூ.3கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர் 2319 பேருக்கு ரூ.3கோடி மதிப்பிலான தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விலையில்லா மடிக்கணிணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணிணிகள் வழங்கிடும் விழாக்கள் நேற்று முன்தினம் மாலை வெகு சிறப்புடன் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்ற இந்த விழாக்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி(585),திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (1091), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி(295),பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி(548) உள்ளிட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவ,மாணவியர் 2319பேருக்கு ரூ.3கோடி மதிப்பிலான விலையில்லா மடிகணிணிகளை தமிழக அரசின் சார்பில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிபுள்ளான்(எ)செல்வம்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணியன்,  அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் திருமங்கலம் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,வட்டாட்சியர் தனலட்சுமி,மற்றும் பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள்,திருமங்கலம் பி.கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கமிட்டி தலைவர் ராஜகோபால்,செயலாளர் சக்திவேல்,பொருளாளர் வெங்கடேஷ்,பி.கே.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கமிட்டி தலைவர் மாணிக்கம்,செயலாளர் டில்லிராஜன்,பொருளாளர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிவகுமார்,சுரேஷ்,இன்பம்,வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து