முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் முதுகலை ஆசிரியர்கள் 814 பேரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறுக்கு கவலைப்பட வேண்டாம். அதற்காக மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2018-2019ம் ஆண்டு கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை-1 (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 1. 3.2019 அன்று வெளியிடப்பட்டது. ஆன்லைன் வழித் தேர்வு நேற்று 119 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 7546 ஆண்களும், 23,287 பெண்கள் என 30,833 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களின் ஹால் டிக்கெட் சோதனை செய்யப்பட்ட பின்னர் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு மையத்தில் உள்ள கம்ப்யூட்டரில் பயோ மெட்ரிக் முறையில் அவர்களின் வருகைப்பதிவு ஆதார் எண் உதவியுடன் கைரேகை மூலம் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் தேர்வு எழுதுவதற்கான கம்ப்யூட்டர் அளிக்கப்பட்டது.

தேர்வர்கள் தங்களுக்கு உரிய ஆன்லைன் பதிவின் போது அளித்த லாக்இன் மூலம் தேர்வினை எழுதுத் துவங்கினர். ஆனால் சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கீழ்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வின் போது சிறிது நேரம் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. அதே போல் தமிழகத்தின் சில இடங்களில் தொழில்நுட்பக் கோளறால் பாதிக்கப்பட்டதாக புகார்கள் வந்தது. கும்பகோணத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு 191 மையங்களில் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட சில தொழில் நுட்ப பிரச்னையால் தேர்வு துவங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத முடியாத மையங்களில் உள்ளவர்களுக்கு வேறு தேதியில் தேர்வினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து