இம்ரான்கான் எனக் கூறி சச்சின் படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைதள ஆர்வலர்கள் கிண்டல்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      உலகம்
imrankhan picture post tease 2019 06 24

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர், இம்ரான்கான் என கூறி சச்சின் படத்தை பதிவிட்டார். இதனை வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின், சிறப்பு உதவியாளராக நயீம் உல் ஹக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், “1969-ல் பிரதமர் இம்ரான் கான்” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். ஆனால் கருப்பு வெள்ளையில் இருக்கும் அந்த புகைப்படம் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் புகைப்படம் ஆகும்.இதை கண்டுபிடித்த வலைத்தள ஆர்வலர்கள் கிரிக்கெட்டும் தெரியவில்லை, பிரதமரையும் தெரியவில்லை என கூறி இம்ரான்கானின் உதவியாளரை, சரமாரியாக கிண்டலடித்து வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து