முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்துதான் தேவை துணை சபாநாயகர் பதவி வேண்டாம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்துதான் தேவை என்றும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி வேண்டாம் என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் 25 இடங்களில் 22 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இதனால் மக்களவையில் 4-வது பெரிய கட்சி என்ற நிலையைப் பெற்றுள்ளது. அத்துடன் சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று, ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவரது முக்கிய செயல் திட்டம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதுதான். ஆனால், கடந்த முறை அ.தி.மு.க.வுக்கு வழங்கிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை இந்த முறை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்க பா.ஜ.க. தலைமை முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த பதவியைப் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் விரும்பவில்லை.இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி தேவை இல்லை. அது ஆளுங்கூட்டணியில் சேர்ந்தது போலாகி விடும். தவிரவும் அந்த பதவியால் எந்த பலனும் இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரையில் அதை ஏற்க மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டை பா.ஜ.க. தலைமையிடம் தெரிவித்து விட்டோம்’ என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து