முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம்- மணிசங்கர்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முன்வந்துள்ளார். அவரை பதவியில் நீடிக்கும்படி, கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி பிடிவாதமாக மறுத்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வேறு தலைவரை தேர்ந்தெடுக்க ராகுல் காந்தி ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளார். அதுபற்றி கட்சிக்குள் ஆலோசனை நடந்து வருகிறது. ராகுல் காந்தி நீடிப்பதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அந்த அவகாசம் முடியும்வரை எல்லோரும் காத்திருக்க வேண்டும். அதற்குள் யூகங்களை வெளியிடக்கூடாது.ராகுல் காந்தியே நீடிப்பது நன்றாக இருக்கும். ஆனால், அதே நேரத்தில் ராகுல் காந்தியின் சொந்த விருப்பத்தையும் மதிக்க வேண்டும். நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம். ஆனால், நேரு குடும்ப உறுப்பினர்கள், கட்சியில் தீவிர பங்கெடுப்பதுடன், கடுமையான கருத்து வேறுபாடுகள் எழும்போது அதை தீர்க்க உதவி செய்தால், அவர்கள் தலைமை பொறுப்பில் இல்லாமலேயே நாம் நிலைத்திருக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து