முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வேண்டி இஸ்லாமியர்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

மதுரை : தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

தமிழ்நாட்டை கடந்த ஆண்டு கைவிட்ட பருவமழை இந்த ஆண்டும் போதிய அளவு கைகொடுக்குமா? என்ற ஏக்கம் மக்கள் மனதில் குடிகொண்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் தண்ணீருக்காக மக்கள் இரவு-பகலாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்தப்பட்டன. இதேபோல், பிறமதத்தினரும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், மதுரை மாவட்டத்தில் அன்னவாசல் அருகே மழை வேண்டி நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்தினர். இந்நிலையில் மதுரை மாநகரில் நேற்று மாலை 4 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பத்தால் தவித்த மதுரை மண் சற்று குளிர்ந்து போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து