முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் குறித்து

ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்து எந்தெந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவது?, எவ்வளவு நிதி ஒதுக்குவது? என்பது குறித்தும், புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும்  வாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு, சட்டசபை கூட்டத் தொடரில் அவை அறிவிப்புகளாக வெளியிடப்படும்.

குடிநீர் பிரச்சனை...

இவை தவிர சென்னை நகர மக்களின் தண்ணீர் தாகத்தை தணிப்பதற்கு மேலும் எந்தெந்த வகைகளில் எல்லாம் தண்ணீர் எடுத்து வர முடியும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் கொண்டு வரும் தண்ணீரை ஜூலை 2-வது வாரம் பெற்று விட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆவடி மாநகராட்சி...

சட்டசபை கூட்ட தொடரில் கொண்டு வரப்பட வேண்டிய புதிய சட்ட மசோதாக்கள் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது. ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றி சமீபத்தில் அரசால் வெளியிடப்பட்டது. அந்த மாநகராட்சியில் எந்தெந்த வார்டுகளை இணைப்பது என்பது பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டது. ஆவடி மாநகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. தனி அதிகாரி நியமனம் பற்றியும் பேசப்பட்டது. இவை தவிர சட்டசபை கூட்ட தொடரில் எதிர்க் கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு தக்க ஆதாரங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்பது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவாதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து