முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்ஜினியரிங் படிப்புக்கான சிறப்பு கவுன்சிலிங் இன்று தொடக்கம் - மாற்றுத்திறனாளிகள் 138 பேருக்கு அழைப்பு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்காக மாற்றுத்திறனாளிகள் 138 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

45 மையங்களில்...

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் பெறப்பட்டது.  இந்தாண்டு 494 பொறியியல் கல்லூரியில் உள்ள 1,72,940 இடங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 3ம் தேதி வெளியிட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் சான்றிதழ் சரிபார்ப்பு 45 மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பம் செய்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 1 லட்சத்து ஆயிரத்து 672 பேர் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். இவர்களின் சான்றிதழ்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் 20-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

33,675 இடங்கள்...

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 479 கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 598 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் இருந்து 29,342 இடங்களுக்கும் என 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களும் உள்ளன. 13 அரசு, அரசு உதவிபெறும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுயநிதிப் பிரிவு ஆகியவற்றில் 6,137 இடங்களும், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகள் 19 ஆகியவற்றில் 8,840 இடங்களும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1,116 இடங்களும், மத்திய அரசு பொறியியல் கல்லூரி 3ல் 185 இடங்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரி 350ல் 1,22,987 இடங்களும், 93 சிறுபான்மை அந்தஸ்து பெற்ற சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 33,675 இடங்களும் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

1,458 பேருக்கு அழைப்பு...

சிறப்பு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு (25-ம் தேதி ) இன்று நடைபெறுகிறது. இந்த கலந்தாய்விற்கு 138 மாணவர்கள் அழைக்கப்பட்டு, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 26-ம் தேதி நடைபெறும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்விற்கு 950 பேருக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது.

27-ம் தேதி விளையாட்டு பிரிவினருக்கான 500 இடங்களுக்கு 1650 பேருக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது. அதேபோல் தொழில் பிரிவில் உள்ள இடங்களுக்கு 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்விற்கு 1,458 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூலை 3-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 5 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து