கவியரசு கண்ணதாசன் அவர்களின் 93-வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      சிவகங்கை
24 Kannadasan birthday function photo-

சிவகங்கை,-                   சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் இன்று (24.06.2019) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 93-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்து  கவியரசு கண்ணதாசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற இசை விழாவில் பேசுகையில்,

         கவியரசு கண்ணதாசன் அவர்கள் நமது மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால் அவரது பெருமை இங்குள்ள ஒவ்வொருவருக்கும் புகழைத் தேடித்தரும். அந்தவகையில் அரசவையில் அங்கம் வகித்த கவிஞராக மட்டுமன்றி தமிழ் உலகிற்கே பெருமை தேடித்தந்த மாபெரும் தமிழ் கவிஞராவார். அவரால் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பாடல்கள், 4000-க்கு மேற்பட்ட கவிதைகள் என எண்ணிலடங்கா தொகுப்புகள் இவ்வுலகை ஆண்டு வருகிறது. அவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் சரி, ஒவ்வொரு கவிதை வரியிலும் சரி தனிமனிதனின் ஒழுக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அனைத்து அர்த்தங்களும் அடங்கிய வரிகள் உள்ளடங்கும். அத்தகைய சிறப்புமிக்க காவியங்களை இன்றைய இளைஞர் சமுதாயம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை முழுமையாக தெரிந்து கொண்டோமானால் நல்ல ஒழுக்க நெறிகளுடனும், சிறந்த சான்றோராக திகழமுடியும். மாபெரும் கவிஞர் அய்யா அவர்கள் எழுதிய ஒவ்வொரு வரியிலும் மாவட்டத்திற்கு மட்டுமன்றி மாநிலத்திற்கும் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்துள்ளது. அதேபோல் இன்றைய இளைஞர் சமுதாயம் கவிஞர் அய்யா அவர்களின் இலக்கியங்களை பிரதானமாக கொண்டு சிறந்த சான்றோர்களாகி மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தெரிவித்தார்.
        பின்னர், சமூக ஆர்வலர் அனந்தராமன் அவர்கள் தலைமையில் இசைக்குழுவினரின் கவியரசு கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களை சுமார் 100-க்கும் மேற்பட்ட பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் காரைக்குடி இராமனாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
         இந்நிகழ்ச்சியில மாவட்ட கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கருப்பணராஜவேல், வட்டாட்சியர் பாலாஜி, கவியரசு கண்ணதாசன் அவர்களின் புதல்வி  விசாலாட்சி கண்ணதாசன், கவியரசு கண்ணதாசன் மன்றத்தலைவர் மரு.சுரேந்தர், செயலாளர் அரு.நாகப்பன், முன்னோடி வங்கி முன்னாள் மேலாளர் பெருமாள், தலைமையாசிரியர் இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து