முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விருதுநகர் அமமுகவினர்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர். - விருதுநகரை சேர்ந்த ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியில் இருந்து விலகி பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
 விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த எம்பி தேர்தல், எம்எல்ஏ தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 150 பேர் அக்கட்சியில் இருந்து விலகி  பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  21வது வார்டு கழக செயலாளர் சரவணன், நகர இலக்கிய அணி செயலாளர் திருக்குமரன், நகர வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச்செயலாளர் பிரியா, நகர இளைஞரணி துணைத்தலைர் செல்வராஜ், இளைஞரணி துணை தலைவர் ரவீந்திரநாத், நகர இளைஞரணி இணைச்செயலாளர் பிரபாகரன், நகர இளைஞரணி பொருளாளர் அசோகன், நகர அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் விஜயராஜ், நகர மீனவரணி செயலாளர் முத்துப்பாண்டி, விருதுநகர் 19வது வார்டு கழக செயலாளர் சுரேஷ்குமார், விருதுநகர் 21வது வார்டு பிரதிநிதி கார்த்திக், நகர இளைஞரணி துணைச்செயலாளர் மோகன்,  விருதுநகர் 21வது வார்டு முருகன், விருதுநகர் 4வது வார்டு துணைச்செயலாளர் சித்ராதேவி, விருதுநகர் 4வது வார்டு இணைச்செயலாளர் பிரபாவதி ,  விருதுநகர் 4வது வார்டு இணைச்செயலாளர் சிவரஞ்சனி, நகர அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் பிரகலாதன், முத்துலட்சுமி, பாண்டியம்மாள், சித்ரா, கஸ்தூரி, அரியம்மாள், தீபா, ஜோஸ்பின், போதும்பொண்ணு,  ராஜா,   நாகராஜன், கணேஷ்குமார், அசோக்குமார், கருப்பையா, மாரிமுத்து, அழகர்சாமி, ராஜேந்திரன் உட்பட ஏராளமான அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் நைய்னார்முகமது, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து