முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஷ்லி !

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதில் நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 6–3, 7–5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை (ஜெர்மனி) தோற்கடித்து மகுடம் சூடினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியின் மூலம் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் அதிகாரபூர்வமாக அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1976–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் இவோன் கூலாகோங் முதலிடத்தில் இருந்தார். ஒட்டுமொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிக்கும் 27–வது வீராங்கனை ஆஷ்லி பார்டி ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து