மக்களின் நம்பிக்கையை வெல்வதை தவிர மிகப் பெரிய வெற்றி ஏதுமில்லை - பார்லி.யில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
pm modi talk 2019 04 10

புது டெல்லி : மக்களின் நம்பிக்கையை வெல்வதை தவிர மிகப்பெரிய வெற்றி ஏதும் இல்லை என ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பல தசாப்தங்களுக்குப் பிறகு, நாடு ஒரு வலுவான உத்தரவை வழங்கி உள்ளது. ஒரு அரசாங்கம் மீண்டும் அதிகாரத்திற்கு வர வாக்களிக்கப்பட்டது. வெற்றி மற்றும் தோல்வியின் அடிப்படையில் நான் ஒருபோதும் தேர்தலைப் பற்றி சிந்திப்பதில்லை. 30 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கும், நமது குடிமக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு என்பதே எனக்கு சிறப்பு. இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் தங்களை விட, இந்திய மக்கள் நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இந்த எண்ணம் பாராட்டத்தக்கது. நமது நாடு குறித்து, தலைவர்கள் பல கனவுகளை கண்டிருந்தனர்.

5 ஆண்டு செயல்பாடுகளை கணக்கிட்டு எங்களுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளனர். இந்திய மக்களுக்காக பணியாற்றி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே என்னைப்பொருத்தவரை மனதிற்கு திருப்தி தரும். முதன்முறையாக உறுப்பினர்கள் அனைவரும் முன்னோக்கி செல்லும் எண்ணத்தில் பேசினர். சபாநாயகர் ஓம்பிர்லா அவையை அருமையாக நடத்துகிறார். அனைத்து சவால்களையும் நம்மால் எளிதாக முறியடிக்க முடியும் . விவாதத்தில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது அரசு எப்போதும் ஏழைகளுக்கானது. மக்களின் நம்பிக்கையை வெல்வதை தவிர மிகப்பெரிய வெற்றி ஏதும் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து