முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று காஷ்மீர் மாநிலம் செல்கிறார் அமித்ஷா. இந்த பயணத்தில் அவர் அமர்நாத் புனித யாத்திரையும் மேற்கொள்ள உள்ளார்.

2-வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு, அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த விரும்புகிறது. உள்நாட்டு பாதுகாப்பு முழுமையும் கையாளும் வகையில் பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று 26-ம் தேதி மற்றும் நாளை 27-ம் தேதி காஷ்மீருக்கும், அதே பயணத்தில் அமர்நாத்திற்கும் செல்கிறார். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு குறித்தும், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த பயணத்திலேயே அமர்நாத் யாத்திரையையும் அமித்ஷா மேற்கொள்கிறார். அங்குள்ள புனிதக் குகையில் பனி லிங்கத்தை வணங்குகிறார். பின்னர், யாத்ரிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உயர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிடுகிறார். அமித்ஷாவின் அமர்நாத் யாத்திரை நடக்கும் அதே நேரத்தில், ஹூரியத் தலைவர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து