புவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ! பி.சி.சி.ஐ தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      விளையாட்டு
Bhubaneswar kumar-Navdeep Saini 2019 06 25

லண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இங்கிலாந்து செல்லவுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

தசைப் பிடிப்பு...

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தனது 3-வது ஓவரை வீச வந்த புவனேஸ்வர் குமாருக்கு காலின் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் பந்துவீசாமல் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதிகபட்சம் 3 போட்டிகள் வரை பங்கேற்க வாய்ப்பில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

விரைவில் தகுதி...

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு சௌதாம்ப்டனில் உள்ள விடுதியின் படிகளில் ஏறும் போது புவனேஸ்வர் குமார் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் புவனேஸ்வர் குமார் முழு உடல்தகுதியை அடைவார் என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நவ்தீப் சைனி...

இதனிடையே ரஞ்சி மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இங்கிலாந்து விரைவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐ.பி.எல் முடிந்த பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பி.சி.சி.ஐ. உத்தரவிட்டதன் பேரில் நவ்தீப் சைனி தொடர்ந்து பயிற்சி பெற்று வந்ததார். மேலும் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ரிஷப் பண்ட் உடன் நவ்தீப் சைனியும் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து