உலக கோப்பை 31வது லீக் ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பங்களாதேஷ் !

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      விளையாட்டு
Bangladesh Team win 2019 06 25

லண்டன் : உலகக் கோப்பை தொடரில் நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது பங்களாதேஷ் அணி.

31வது லீக் ஆட்டம்...

உலகக் கோப்பை தொடரின் 31வது லீக் போட்டியில் பங்களாதேஷ்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 16 ரன்களிலும் தமிம் இக்பால் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனும் விக்கெட் கீப்பர் ரஹீமும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

262 ரன்கள்...

அரை சதமடித்த ஷகிப், 51 ரன்களிலும் ரஹீம் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த  அணி, 7 விக் கெட்  இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் ரகுமான் 10 ஓவரில் 39 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், கேப்டன் நைப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முகமது நபி டக் அவுட்...

பின்னர் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கான் அணி. கேப்டன் குல்பதின் நைப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 47 ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. பங்களாதேஷ் வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்தனர். ரஹமத் ஷா 24, அஸ்கர் ஆப்கன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், இந்தியாவுடனான போட்டியில் அபாரமாக ஆடிய முகமது நபி, இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனார்.

3-வது வெற்றி...

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவிய து, பங்களாதேஷ் அணி, 62 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.  பேட்டிங் கில் அசத்திய ஷகிப் அல் ஹசன், பந்துவீச்சிலும் மிரட்டி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஏழு போட்டியில் ஆடியுள்ள பங்களாதேஷ் அணிக்கு இது 3-வது வெற்றி. ஆப்கான் அணி வெற்றி கணக்கைத் தொடங்க வில்லை.

ஷகிப் அல் ஹசன் சாதனை

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே அசத்தலான ஃபார்மில் உள்ள ஷகிப் அல் ஹசன் 2 சதங்கள், மற்றும் 3 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய ஷகிப், வழக்கமான பாணியில் விளையாடி 51 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் நடப்பு தொடரில் அதிக ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் வார்னரை, ஷகிப் பின்னுக்குத் தள்ளினார். ஷகிப் 476 ‌ரன்களுடன் முதலிடத் திலும், 447 ரன்களுடன் வார்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அதுமட்டுமின்றி உலகக்கோப்பை போட்டிகளில், ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் ‌பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையையும் ஷகிப் நிகழ்த்தினார். அவர் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் 35 ரன்னை எட்டிய போது இந்த சாதனையை படைத்தார். ஷகிப், உலக கோப்பை போட்டியில் இதுவரை 27 ஆட்டங்களில் ஆடி 1,016 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு உலகக் கோப்பை போட்டிகளில், அரைசதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்தி ஆல் ரவுண்ட் சாதனையையும் ஷகிப் படைத்தார். இதற்கு முன் இந்தியாவின் கபில்தேவ், யுவராஜ் சிங் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு 03.06.2020 | Coronavirus Update Tamil Nadu District Wise

கறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US

மலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி

Sylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

டம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி? | Ravindran Duraisamy Exclusive Interview

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Caramel Pudding with Azhagu Serial Actress Sahana Shetty | நடிகை சஹானா ஷெட்டியின் கேரமல் புட்டிங்

ஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து