முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஜூன் 25-ம் தேதி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி :

3-ம் இடத்தில்...

2019-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்து வேல்ஸ் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் வருவதற்கு சாம்பியன் அணிகள் போட்டா போட்டி கொண்டிருக்கின்றன. இந்தியா இதுவரை எந்தத் தோல்வியும் சந்திக்காமல் கெத்தாக புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறது.

உலகக் கோப்பையை...

ஜூன் 25-ம் தேதி, 36 ஆண்டுகளுக்கு முன்பு கபில் தேவ் தலைமயிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. அப்போது நாடே இந்த வெற்றியை பெரும் கொண்டாட்டமாவே பார்த்ததது.

1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு என முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, சிறிய அணியான இந்தியாவிடம் தனது சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது.

27 ஆட்டங்கள்...

1983-ம் ஆண்டு புருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டி ஜூன் 9 முதல் 25-ம் தேதி வரை இங்கிலாந்தில். அந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதில் இரட்டை ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெற்றன.

மொத்தம் 60 ஓவர்கள்...

1983-ம் ஆண்டு உலகக்கோப்பை முற்றிலும் எதிர்பாராத விதமான முடிவுகளை அளித்தது. இதிலும் 60 ஓவர் அடிப்படையிலேயே போட்டி நடத்தப்பட்டது. 15 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கையும், பி பிரிவில் மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன.

இந்தியா தனது லீக் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸை 34 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 31 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்திலும், வென்றது.

இறுதிக்கு முன்னேற்றம்...

இதனையடுத்து அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றன ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தானும், பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

இந்தியா பேட்டிங்...

இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய சொன்னது. அப்போது உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணியில் ஸ்ரீகாந்த் 38, அமர்நாத் 26 ரன்களை சேர்த்தனர்.

140 ரன்களில் அவுட்...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் இந்தியாவை நிலைகுலையச் செய்தனர்.  54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப்பெற்றுவிடும் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் இந்திய பவுலர்கள் மிக திறமையாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இந்தியா சாம்பியன் ஆனது. முதல் முதலாக உலக் கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட்டார் கபில் தேவ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து