6 தமிழக ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
election commission 2019 03 03

புது டெல்லி : ஜூலை 24-ம் தேதியுடன் தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது என தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூலை 24-ல் முடிகிறது...

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜூனன், ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில் காலியாகும் இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூலை 18-ல் முடிவு...

வேட்பு மனு தாக்கல் ஜூலை 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 9-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 11-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.பி.க்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.பி.க்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாகும் வாய்ப்புள்ளது. தமிழக சட்டசபையில் ஜூலை 18-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து அன்று மாலை சுமார் 5 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் விவரம்

1) மனு தாக்கல் ஆரம்பம் - ஜூலை 1-ம் தேதி.
2) மனு தாக்கல்  முடிவு - ஜூலை 1-ம் தேதி.
3) மனு பரிசீலனை - ஜூலை 9-ம் தேதி.
4) மனுகளை திரும்ப பெற கடைசி - ஜூலை 11-ம் தேதி.
5) வாக்குப்பதிவு நாள் - முடிவு - ஜூலை 18-ம் தேதி.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து