முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் பற்றி பேச தயாநிதிமாறனுக்கு அருகதையோ - தகுதியோ இல்லை - அமைச்சர் ஜெயகுமார் காட்டம்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஊழல் குறித்து பேசுவதற்கு தயாநிதி மாறனுக்கு எந்த அருகதையும் இல்லை. தகுதியும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் அரசாங்கம் என விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில்,

அழிக்க முடியாது...

சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

நாடாளுமன்றத்தில் யார் எதை பேசுவது என்ற விவஸ்தையே இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான் என்றும், அ.தி.மு.க. மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் கூறுவதாகவும், தி.மு.க.வின் ஊழல் கறைளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது என கடுமையாக விமர்சித்தார்.

உறுதிப்படுத்தியது...

தி.மு.க. ஆட்சியின் வீராணத் திட்டத்தில் ஊழல் நடந்ததும், காண்டிராக்டர் சத்யநாராயணா இறந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதுமட்டுமல்ல, பூச்சி மருந்துஊழல், உள்ளிட்ட ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்தார். அதன் அடிப்படையில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனும் ஊழல் நடந்திருப்பது உறுதிப்படுத்தியது.

வேலூர் தேர்தல்...

விஞ்ஞான ரீதியான ஊழல் என்று சான்றிதழ் அளித்தது சர்க்காரியா கமிஷன். ஊழலைப் பற்றி யார் பேசுவது? நாடு போற்றும் உத்தமர், ஏழ்மை நிலையில் இருந்த தயாநிதிமாறன், ஊழல் நிறைந்த தயாநிதி மாறன் பேசலாமா? தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக ஒரு தேர்தல் நடைபெற்றது. எங்களுக்கு பணத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால் வேலூரில் பணம் கொடுத்ததால்தான் அந்த தேர்தலே நிறுத்தப்பட்டது. அதை மறந்து விட்டு தயாநிதிமாறன் பேசலாமா ? என்றார் அமைச்சர். 
சுயரூபம் தெரிந்து...

அ.ம.மு.க.வில் இருந்து தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் டி.டி.வி.தினகரனின் சுயரூபம் தெரிந்து அங்கிருந்து அனைவரும் வெளியேறி வருவதாகவும், சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பதிலளித்தார். மேலும் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுக்கும் தனியார் லாரிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது தயவு தாட்சனையமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை முதல்வர் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து