முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - சிகாகோ நகரில் 10-ம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 4-ம் தேதி தொடங்குகிறது - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறவிருப்பதாகவும் இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 89 தமிழறிஞர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தமிழ்ப்பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

வடஅமெரிக்காவில்...

தமிழ்ப்பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பத்தாம் உலகதமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் வரும் ஜூலை 4 ம்தேதிமுதல் 7 வரை நடைபெறுகிறது, அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம்மற்றும் அமெரிக்காவில் தமிழ்ச்சங்கபேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளால் இந்த மாநாடு நடத்தப்படவிருக்கிறது. வடஅமெரிக்காவில் முதன்முதலாக நடத்தப்படும் இந்த மாநாடு அரசியல் தலையீடு இன்றி அறிவியல் முறையிலான தமிழ்ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுத்து நடத்துதல் என்ற நன்னோக்கமுடையது.

5,500 பேர்...

மாநாட்டில் மையப்பொருளாக தமிழினம், தமிழ்மொழி இலக்கியம் பண்பாடு நாகரீகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம் தமிழ்க்கணினி ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையில் ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தலாகும் இந்த மாநாட்டில் 50 நாடுகளை சேர்ந்த 150 தமிழ்ச்சங்கங்களின் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட 5,500 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள், தமிழகத்தில் இருந்து 89 தமிழறிஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்,மாநாட்டிற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி கேட்டிருக்கிறார்கள்.

புத்தகக் கண்காட்சி...

அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகிய முப்பெரும் தலைவர்கள், தமிழ்நாட்டில் உலகத்தமிழ்மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள் . அவர்களின் வழியில் தமிழக அரசும் உலகத்தமிழ் ஆராய்ச்சில மாநாட்டிற்கு உதவும். மாநாட்டில் ஐம்பதாவது திருவள்ளூவர் சிலை திறக்கப்படுகிறது. உலகத்தமிழ்மாநாட்டில் 1500 பேர், தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 82 பேருடைய ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் புத்தக கண்காட்சி ஒன்றும் நடைபெறவிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து