முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 30 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ. 30 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நவீன மருத்துவக் கருவிகள் நிறுவுதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவித்தல், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம், கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையக் கட்டிடம், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 58 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கான கட்டிடம்,  திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 54 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பிரசவ பிரிவு பேறுகால பின் கவனிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கண் மருத்துவ பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகியவற்றிற்கான கட்டிடம்,  திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றம் பெண்கள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பிரசவ பிரிவு, பேறுகால பின் கவனிப்பு பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகியவற்றிற்கான கட்டிடம்,

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் - காயாமொழி மற்றும் புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம்- கொம்மனந்தல் ஆகிய மூன்று மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் - அனுமன்தீர்த்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம், திருவண்ணாமலை மாவட்டம் - கொழப்பலூர், பெரம்பலூர் மாவட்டம் - இலப்பைக்குடிகாடு, திருநெல்வேலி மாவட்டம் - வாசுதேவநல்லூர், விழுப்புரம் மாவட்டம் - காணை மற்றும் விருதுநகர் மாவட்டம் - ம.ரெட்டியபட்டி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடங்கள் என மொத்தம் 30 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து