மும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சு வலி...
வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாம்பவான் பிரைன் லாராவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 47 வயதான லாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகிறது. 1990 முதல் 2007 வரை 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 131 டெஸ்டில் 11,953 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.88 ஆகும். 34 சதமும், 48 அரை சதமும் அடங்கும். 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி 10,405 ரன் எடுத்துள்ளார். சராசரி 40.48 ஆகும். 19 சதமும், 63 அரை சதமும் அடித்துள்ளார்.