அண்ணா பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      தமிழகம்
annauniversity 2019 01 26

சென்னை : அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது எனவும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணத்தில் எந்தமாற்றமும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

141 பேர் அழைப்பு...

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொறியியல் சேர்க்கையில் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கவுன்சிலிங்கின் முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு (இன்று) நடத்தப்படுகிறது. இந்தப் பிரிவினருக்கு உள்ள 6,915 இடங்களில் சேருவதற்கு 141 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ் வழியில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தப் பிரிவினை தேர்வு செய்ய மாணவர்கள் விரும்புவதில்லை.

கட்டணம் உயர்வு...

பொறியியல் படிப்பில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதை சார்ந்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இளங்கலை மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.18 ஆயிரமும கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித கல்விக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்றுஅமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து