பொறியியல் கவுன்சிலிங் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை: 28-ம் தேதி நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      தமிழகம்
engineering rank list 2019 06 16

சென்னை,  : பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்கள் தமது விருப்பத்திற்குரிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவினை தேர்ந்தெடுப்பது குறித்த தொலைநோக்கு 2019 என்ற இலவசக் கருத்தரங்கம் வரும் 28- ம் தேதி சென்னை - சேத்பெட்டில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனை தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இந்த கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.tholainokku.org என்ற வலைதளத்தில் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 044 – 4864 7444 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து