முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜினாமா முடிவில் உறுதி: ராகுல் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா

புதன்கிழமை, 26 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால், அவரது வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் ராகுல்  ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராகுல் காந்தியின் வீட்டின் முன் ஏராளமான இளைஞர் காங்கிரசார் திரண்டு போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து