முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி

புதன்கிழமை, 26 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதின பேரணி நடைபெற்றது.
    சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு, யூத் ரெட் கிராஸ் மற்றும் பெய்த் ஆராய்ச்சி மையம், உதயம் குடி போதை மறு வாழ்வு மையம் ஆகியோர் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஸ்மீனா தொடங்கி வைத்தார். இதில் அரசுசு மகளிர் கலைக்கல்லூரி, ராமநாதபுரம், செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, முஹம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா வெளியிட கலால் துறை உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன், ரெட் கிராஸ் புரவலர் முனைவர் எம். தேவி உலகராஜ் ஆகியோர் பெற்று மக்களிடம் விநியோகித்தனர்.
   சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்களை கோஷமிட்டுச் சென்றனர்.  பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.  மது விலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். லயோலா இக்னேசியஸ், ராமநாதபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன்,  யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் முனைவர் ஏ. ஆனந்த்,  கல்லூரி திட்ட அலுவலர்கள் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேராசிரியர் கே. மலர்விழி, தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முனைவர் ஸ்ரீமதி, முஹம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேராசிரியர் பி. பிரியங்கா மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர் ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.ப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி  வி. முத்து கண்ணு மற்றும் குழுவினர் தலைமையில் ஃபெய்த் ஆராய்ச்சி மைய  திட்ட இயக்குனர் திருமதி தேவி, ரெட் கிராஸ் மாவட்ட பொருளாளர் சி. குணசேகரன், ரெட் கிராஸ் ஆயுட் கால உறுப்பினர் யு. மலைக்கண்ணன் ஆகியோர் பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து