முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீயவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம்: திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது:

புதன்கிழமை, 26 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்- தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் மதுரை மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீயவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி,இருப்பு வைத்தல்,எடுத்துச் செல்லுதல்,வழங்குதல்,விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் போன்றவற்றுக்கு 1.1.2019 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீயவிளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதிலும் மெசேஜ் ஆன் வீல்ஸ் என்ற பெயரில் பிரச்சார கலைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீயவிளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பிரச்சார கலைப்பயணம் 2018-2019 நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளரும்,திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநருமான எம்.எஸ்.பி.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லுப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணத்தை தொடங்கி வைத்தார். அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் மேளதாளங்கள் முழங்கிட கரகாட்டம்,கிழவன்-கிழவி ஆட்டம்,கோமாளி கூத்து உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து பயனடைந்து சென்றனர்.மேலும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.பி.குழந்தைவேல் சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து பேரையூர்,உசிலம்பட்டி,கருமாத்தூர்,செக்காணூரணி, சோழவந்தான்,வாடிப்பட்டி,சமயநல்லூர்,மதுரை ஆரப்பாளையம்,மாட்டுத்தாவணி ஆகிய இடங்களிலுள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சிகள் சிறப்பாகநடைபெற்றது.இதில் டி.கல்லுப்பட்டி சுகாதாரபணி மேற்பார்வையாளர் முத்தழகு,இளநிலை உதவியாளர் சங்கர்,பணியாளர்கள் முருகன்,மணி,பஞ்சவர்ணம்,ஈஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்;டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து