முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை லீக் ஆட்டம்: இந்திய அணியின் அதிரடி தொடருமா? வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்

புதன்கிழமை, 26 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மான்செஸ்டர் : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் இந்தியாவின் அதிரடி தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

அரை இறுதிக்கு...

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

3-வது இடத்தில்...

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 4 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. நியூசிலாந்துடன் மோத வேண்டிய 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

6-வது ஆட்டம்...

4-வது போட்டியில் பாகிஸ்தானை 89 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன்னிலும் தோற்கடித்தது. இந்திய அணி 6-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிரா போர்ட் மைதானத்தில் இந்திய நேரடிப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

வெற்றி பெறும்...

இந்திய அணியின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்திய அணி 4 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. இதில் இரண்டில் வென்றால்தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும். இதனால் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கவனமாக ஆட...

பலவீனமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் தட்டு தடுமாறி தான் வெற்றியை பெற்றனர். ஆப்கானிஸ்தான் கடுமையான சவாலை கொடுத்தது. இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மிகவும் கவனமாக விளையாட வேண்டும். முதல் 3 வரிசை வீரர்கள் (ரோகித்சர்மா, ராகுல், விராட்கோலி) மிகப் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் ரன் குவிக்க இயலாது.

அதிரடி அவசியம்...

2 சதம் அடித்த ரோகித்சர்மா ஆப்கானிஸ்தானுககு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக மீண்டும் திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டன் விராட்கோலியும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 அரை சதத்துடன் 244 ரன்கள் எடுத்துள்ளார். மிடில் ஆடர் வரிசையில் அதிரடியான ஆட்டம் அவசியமானது.

பும்ரா சிறப்பு...

கடந்த ஆட்டத்தில் டோனியும், கேதர்யாதவும் ஆமை வேகத்தில் ஆடினார்கள். அவர்கள் அதில் இருந்து மாறி அதிரடியை வெளிப்படுத்த வேண்டும். இடது கை பேட்ஸ்மேன் அணியில் இருப்பது அவசியமானது. அணியில் இருந்த இடதுகை வீரர் தவான் காயத்தால் விலகியுள்ளார். புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக விளையாடிய முகமது சமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினார். பும்ரா அணியின் முது கெலும்பாக இருக்கிறார். சுழற்பந்து வீரர்களில் சாஹல், குல்திப் யாதவ் ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளனர்.

8-வது இடத்தில்...

வெஸ்ட்இண்டீஸ் அணி 1 வெற்றி, 4 தோல்வி, 1 முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளி பெற்று 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பாகிஸ்தானை மட்டும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியா (15 ரன்), இங்கிலாந்து (8 விக்கெட்), வங்காளதேசம் (7விக்கெட்), நியூசிலாந்து (5 ரன்) ஆகியோரிடம் தோற்றது. தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

சவால் விடும் வகை...

இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் வெஸ்ட்இண்டீஸ் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் மயிரிழையில் வெற்றியை தவற விட்டது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக சவால் விடும் வகையில் விளையாடும் என்று எதிர்பார்க்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிரிஸ் கெய்ல், ஹெட்மயர், ஹோப், பிராத்வெயிட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து