இது எங்களுடைய உலகக்கோப்பை: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

புதன்கிழமை, 26 ஜூன் 2019      விளையாட்டு
Ben-stokes 2019 06 26

Source: provided

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடர் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ‘இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இந்திய அணி தற்போது சிறப்பான அணியாக இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எங்களது முழு திறமையையும் வெளிக்கொண்டு வருவோம். இது எங்களுடைய உலகக்கோப்பை’ என்று கூறியுள்ளார்
______________

எதையும் செய்ய முடியுமாம்: பாக். கேப்டன் சொல்கிறார்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடனா போட்டியுடன் சேர்த்து மூன்று போட்டிகளிலும் வெற்றில் பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். சீதோஷ்ணநிலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அது நம் கையில் இல்லை. முகமது அமிர் சூப்பர் பார்முக்கு வந்தது மகிழ்ச்சி. அதேபோல் மற்ற பந்து வீச்சாளர்களும் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள்.
பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் அணியால் எதையும் செய்ய முடியும். நாங்கள் அடிமேல் அடி வைத்து ஒவ்வொரு போட்டியாக சென்று கொண்டிருக்கிறோம். ஒரு அணியாக நாங்கள் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
_______________

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: கால்இறுதியில் அமெரிக்கா, சுவீடன்

8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, ஸ்பெயினை சந்தித்தது. பரபரப்பான இந்த மோதலில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறியது. அமெரிக்க அணியில் மெகன் ராபினோ 7-வது மற்றும் 76-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
____________

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத ஹாக்கி வீராங்கனை லால்ரெம்ஸியாமி !

ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகளிர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணியில் உள்ள 19 வயது வீராங்கனையான லால்ரெம்ஸியாமி-யின் தந்தை லால்தன்சங்கா ஸோடெ கடந்த வெள்ளியன்று மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் இந்தியா-சிலி அணிகளுக்கிடையேயான அரையிறுதிப்போட்டி இருந்தது. அதில் வென்றால்தான் இந்திய அணி டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்ற சூழலில் இந்திய அணி வீராங்கனை லால்ரெம்ஸியாமி, தன் தந்தையின் மரணம் அறிந்து இடிந்துபோனார்.  இருப்பினும் தாய் நாட்டின் வெற்றியை மனதில் கொண்டு இறுதிச்சடங்கில் பங்கேற்பதில்லை என கனத்த மனதோடு முடிவெடுத்தார். இறுதிப்போட்டியில் ஜப்பானை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கிடையே நாடு திரும்பிய லால்ரெம்ஸியாமி மிஸோரமில் உள்ள தனது கிராமத்துக்கு சென்றதும் தாயை கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதார். இதுபார்ப்போர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
____________

காமன்வெல்த் போட்டி புறக்கணிப்பா? மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில்

2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவை நீக்குவது என்று காமன்வெல்த் விளையாட்டு நிர்வாக கமிட்டி கடந்த வாரம் முடிவு செய்தது. துப்பாக்கி சுடுதலில் தான் இந்தியா அதிகமான பதக்கங்களை அள்ளி குவித்து வருகிறது. அதை நீக்கியதால் அதிருப்திக்குள்ளான இந்திய ஒலிம்பிக் சங்கம், காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கடுமையாக எச்சரிக்கை விடுத்தது. இந்த விவகாரம் குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘இது குறித்து நாங்கள் துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்திடம் எதுவும் விவாதிக்கவில்லை. அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. ஆனால் காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக எடுக்க முடியாது. எது என்றாலும் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். விரைவில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பேசுவோம்’ என்றார்.
____________

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து