முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பின் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கூட்டத்தொடரில் இடம்பெறும்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பின் தமிழக சட்டசபை இன்று காலை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன.

இரங்கல் தீர்மானம்...

தமிழக சட்டசபை இன்று காலை கூடுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாமணி மற்றும் கனகராஜ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் வாசிக்கப்படும். வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி மானியக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. முதல் நாளான திங்கட்கிழமை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குறித்த விவாதங்கள் தொடங்கும். அன்றே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மேலும் சட்டசபையின் நிகழ்ச்சி நிரல் அட்டவணை வருமாறு:-

பால்வளத் துறை...

ஜூலை 2-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, மற்றும் உயர்கல்வித் துறை, 3-ம் தேதி கூட்டுறவுத் துறை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 4-ம் தேதி எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, 5-ம் தேதி மீன்வளம், கால்நடைபராமரிப்பு, பணியாளர் மற்றும் நிருவாக சீர்த்திருத்தத் துறை, பால்வளத் துறை ஆகிய மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும்.

சிறுபான்மை நலத்துறை...

ஜூலை 8-ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்டசெயலாக்கத்துறை, 9-ம் தேதி நீதிநிருவாகம், சிறைச்சாலைகள் .சட்டத்துறை, 10-ம் தேதி சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை, 11-ம் தேதி தொழில் துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 12-ம் தேதி கைத்தறி, மற்றும் துணிநூல், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆகிய மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும்.

வேளாண்துறை...

15-ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், பாசனம், 16- ம் தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 17-ம் தேதி வேளாண்துறை, 18-ம் தேதி சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை, 19-ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்புத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும்.

போக்குவரத்துத் துறை...

அதைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி சட்டசபை கூடும். 22-ம் தேதி காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, 23-ம் தேதி காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, வணிகவரிகள் , முத்திரைத்தாள்கள் மற்றும் பதிவுத் துறை தகவல் தொழில் நுட்பத் துறை,  24-ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ் வளர்ச்சி, 25-ம் தேதி இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், நிர்வாகம், போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும்.

பொதுத்துறை...

26-ம் தேதி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கதர்கிராம தொழில்கள் கைவினைப் பொருட்கள் ஆகிய துறைகளின் விவாதங்கள் நடைபெறும். இதையடுத்து 29-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. 29-ம் தேதி பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், 30-ம் தேதி பொதுத்துறை மாநில சட்டமன்றம் ஆளுநர், மற்றும் அமைச்சரவை, நிதித்துறை வீட்டுவசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சி துறை ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடைபெறும். அமைச்சர்களின் பதிலுரையை தொடர்ந்து அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அலுவல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்...

முன்னதாக சட்டசபையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்பது தொடர்பாக, இன்று காலை 11.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமைில் நடைபெறுகிறது. சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை, அவரது அறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். வழக்கமாக ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவை கூடும் முன், சபாநாயகரை, முதல்வர் அவரது அறைக்கு சென்று சந்திப்பது வழக்கம். இந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து