முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களின் கூட்டு முயற்சியால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி - பாக். கேப்டன் சர்பிராஸ் பேட்டி

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம் : வீரர்களின் கூட்டு முயற்சியால் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.

237 ரன்கள்...

உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து நியூசிலாந்து முதல் தோல்வியை தழுவியது. பர்மிங்காமில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்னே எடுக்க முடிந்தது. ஜேம்ஸ் நீசம் 97 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), கிராண்ட்ஹோம் 64 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 41 ரன்னும் எடுத்தனர். சகீன்ஷா அப்ரிடி 3 விக்கெட்டும், முகமதுஅமீர், சதாப்கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

6-வது இடத்துக்கு...

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி பாபர் ஆசாமின் சதத்தால் வெற்றி பெற்றது. அந்த அணி 49.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழத்தியது. பாபர் ஆசம் 127 பந்தில் 101 ரன்னும் (11 பவுண்டரி), ஹாரிஸ் சோகைல் 68 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். போல்ட், பெர்குசன், காலின் முன்ரோ தலா 1 விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தான் அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி அரை இறுதிக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 7 புள்ளியுடன் அந்த அணி 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

பேட்டிங் பிரமாதம்...

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்ததாக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மிகவும் கடுமையாக விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். வீரர்களின் கூட்டு முயற்சி வெற்றிக்கு காரணமாக இருந்தது. அனைத்து பந்து வீச்சாளர்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். பாபர் ஆசம், சோகையில் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுவாகும். 238 ரன் கடினமான இலக்கு என்பது தெரியும். இதனால் 50 ஓவர் வரை ஆடுவது என்று விரும்பினேன். ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு பாபரும், ஹாரிசும் பொறுப்புடன் ஆடினர்.

அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 29-ந்தேதியும், நியூசிலாந்து அணி அதே தினத்தில் ஆஸ்திரேலியாவையும் சந்திக்கின்றன.

இம்ரான் கான் வாழ்த்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள்  மோதின. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆட்டத்தின் 49.1 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 241 ரன்கள் எடுத்தது.  முடிவில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள நமது கிரிக்கெட் அணிக்கு என் வாழ்த்துக்கள்.  குறிப்பாக மிகச்சிறப்பாகவும், திறமையாகவும் விளையாடிய பாபர், ஹரிஸ், ஷகின் ஆகியோருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து