முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

34-வது லீக் -125 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர் : மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை 34-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

பேட்டிங் தேர்வு...

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல் 48 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

கோலி 72 ரன்...

அடுத்து வந்த விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அரைசதம் அடித்த விராட் கோலி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், 82 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழக்கும்போது இந்தியா 38.2 ஓவரில் 180 ரன்கள் எடுத்திருந்தது. ஒரு பக்கம் டோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ரன்கள் சேர்க்க இந்தியா 250 ரன்னைத் தாண்டியது.

டோனி 56 ரன்...

கடைசி ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடித்து 59 பந்தில் அரைசதம் அடித்தார் டோனி. கடைசி பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. டோனி 61 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

2-வது இடத்திற்கு...

பின்னர் 269 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அணி தடுமாறினர். அந்த அணியில் அதிகபட்சமாக அம்ப்ரீஸ் 31 ரன்களும், அதற்கு அடுத்தபடியாக பூரன் 28 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சமி 4 விக்கெட்களையும், பும்ரா, ஷாகல் தலா 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் உலக கோப்பை புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

11 புள்ளிகளுடன்...

இந்திய அணியில் சிறப்பாக விளையாடி விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இந்திய விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் மொத்தம் 11 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து