Idhayam Matrimony

நீங்கள் வெற்றி பெற தகுதியானவர் பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஜப்பானில் ஜி 20 உச்சிமாநாடு நேற்று தொடங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியதாவது:-

நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர். நீங்கள் முதன்முறையாக பொறுப்பேற்ற போது, இந்தியாவில் பல பிரிவுகள் இருந்தன. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அனைவரும் சேர்ந்து இருக்கிறார்கள். நீங்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் நல்ல பணியை செய்துள்ளீர்கள். இதற்கு உங்கள் திறமையே காரணம். இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமடைந்துள்ளது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். நாங்கள் பல துறைகளில் ஒன்றாக செயல்படுகிறோம். தற்போது வர்த்தகம் தொடர்பாகவும் பேசுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து