முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் ஜி 20 மாநாடு: குரூப் போட்டோ எடுத்த தலைவர்கள்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஜப்பானில் ஜி 20 உச்சிமாநாடு நேற்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின் போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 நாடுகளின் உச்சிமாநாடு நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு சென்றுள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சியுடன் தொடங்கிய உச்சிமாநாட்டின் போது ஜி 20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுத்து முடிந்ததும் மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. தலைவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றினர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும் போது, ஜி 20 நாடுகளின் தலைவர்கள் வர்த்தகத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பேசினார். வர்த்தக பாதுகாப்பு வாதம் அதிகரித்து வருவதை சீன தலைவர் கடுமையாக எச்சரித்தார். இதே போல் உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும், தடையற்ற, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வர்த்தகத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் ஜப்பான் பிரதமர் வலியுறுத்தினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து