முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை: ஸ்டாலின் அறிவிப்புக்கு அமைச்சர் ஜெயகுமார் நன்றி

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு அமைச்சர் ஜெயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை நேற்று காலை சபாநாயகர் தனபால் தலைமையில் கூடியது. நேற்று காலை சபை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள தேவையில்லை என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம். தற்போது அதை வலியுறுத்தப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று ஸ்டாலின் அறிவித்திருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அ.தி.மு.க. அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மு.க. ஸ்டாலின் உணர்ந்துள்ளார். அவர் உணர்ந்ததற்கு நன்றி என்று தெரிவித்தார் அமைச்சர். மேலும் குடிநீர் பிரச்சினையை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து