தி.மு.க.வில் இணைந்ததால் தங்கதமிழ் செல்வன் இன்று ஹீரோ - நாளை ஜீரோ: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      தமிழகம்
jayakumar 01-09-2018

தி.மு.க.வில் சேர்ந்ததால் தங்கத்தமிழ்ச்செல்வன் ஒன்டே ஹூரோ என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள்...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். பகல் 12 மணி முதல் 1.45 மணிவரை இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்.,

ஒருநாள் மட்டும்...

ஒருவர் ஒரு கட்சியில் சேர்வது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. ஒன்று மட்டும் நிச்சயம். அ.தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்திருந்தால் அவர் எவர் கீரின் ஹூரோ, தி.மு.க.வில் சேர்ந்தால் அவர் இன்று மட்டும் ஒன்டே ஹீரோ அவ்வளவு தான்.

இன்று (நேற்று) நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்றி அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கோட்பாடுகள் கொள்கைகளை நெறிமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணவும், மழைநீரை சேகரிக்கவும், வறட்சியை போக்கவும், குடிமராமத்து திட்டம் ரூ.1,500 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவை...

தற்போது சென்னையில் குடிநீ்ர் பற்றாக்குறை 150 எம்.எல்.டி தான், தற்போது மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 150 எம்.எல்.டி குடிநீருக்கும், பேரூரில் மேலும் ஒரு திட்டம் மூலம் 150 எம்.எல்.டி.க்கும் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் சென்னை மாநகரத்திற்கு போதிய அளவுக்கு குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படும். சென்னையில் கனமழை வரும்போது, மழைநீர்சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம் ஆகியவற்றின் பலன் நிச்சயம் தெரியும் என்றார்.

கட்சியே அல்ல...

இதைத்தொடர்ந்து நிருபர்கள் தினகரனின் அ.ம.மு.க.வில் இருந்து நாள்தோறும் கட்சியினர் வெளியேறுவது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், அவரை ஊடகங்கள் பெரிதாக பில்டப் செய்கிறார்கள். தினகரனின் அ.ம.மு.க. என்ன அமெரிக்காவின் குடியரசு கட்சியா ? அது ஒரு கட்சியே அல்ல என்றார் அமைச்சர் ஜெயகுமார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து