முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணியின் மஞ்சள் நிற ஜெர்சிக்கு ஐ.சி.சி. அனுமதி

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் ராசியான மஞ்சள் நிற ஜெர்சியை அணிய இலங்கை அணிக்கு அனுமதி அளித்துள்ளது ஐ.சி.சி..

புதிய விதிமுறை...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தியா, இங்கிலாந்து. இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் நீலக்கலர் ஜெர்சி அணிந்து விளையாடி வருகின்றன. ஐ.சி.சி.-யின் புதிய விதிமுறைப்படி இந்த நான்கு அணிகளும் நேருக்குநேர் மோதும்போது ரசிகர்கள் வீரர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெர்சியை மாற்றிக் கொள்ள வேண்டும். போட்டியை இங்கிலாந்து நடத்துவதால் அந்த அணிக்கு விதிவிலக்கு. இதனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஜெர்சியை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

ஐ.சி.சி. அனுமதி...

அந்த வகையில் இலங்கை மஞ்சள் நிற ஜெர்சியுடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இங்கிலாந்து எதிரான போட்டியிலும் அணிந்து விளையாடியது. இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றதால் மஞ்சள் நிறம் ராசி என இலங்கை கருதுகிறது. இதனால் அதே ஜெர்சியை தொடரில் மீதமுள்ள போட்டிகளின்போதும் அணிந்து விளையாட ஐ.சி.சி.-யிடம் அனுமதி கேட்டிருந்தது இலங்கை அணி. தற்போது இலங்கை அணிக்கு ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது.

அரையிறுதிக்கு...

இலங்கை தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது. மூன்று போட்டிகளிலும் வெற்றி  பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது இந்தியா ஆரஞ்சு கலர் ஜெர்சி அணிந்து விளையாடலாம் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து