முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

மெல்பர்ன் : இந்தியாவை சேர்ந்த 26 வயதான பிரியா செர்ராவ், ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி இந்த ஆண்டு நடக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாடும் தனித்தனியாக அழகிப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் ஒரு நபரை தங்கள் நாடு சார்பில்பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள வைப்பது நடைமுறை. இந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரியா செர்ராவ் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்.

சட்டப்படிப்பு படித்துள்ள பிரியா இந்தியாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இந்த ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பிரியா செர்ராவ் போட்டியிட உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இதுவரை என் வாழ்நாளில் மாடலிங் செய்ததில்லை. அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை. என் முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய பட்டத்தை வென்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து