முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக பேச்சுவார்த்தையை துவங்க அதிபர் டிரம்ப்- ஜி ஜிங்பிங் ஒப்புதல்

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஒசாகா : வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக மோதல் நீடித்தது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது. சீனாவும், அதற்குப் பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. இருநாடுகளும் இவ்வாறு மோதிக் கொண்டது உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இந்த சூழலில், ஜி 20 மாநாட்டின் போது டிரம்ப் - ஜி ஜிங்பிங் சந்திக்க இருந்தது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜி 20 மாநாட்டுக்கு இடையே இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவும், அமெரிக்காவும் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை துவங்க ஒப்புக்கொண்டுள்ளன. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் இரு நாடுகளும் இந்த பேச்சுவார்த்தையை தொடரும். சீனாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து