பிரான்சில் வரலாறு காணாத வகையில் வெப்ப நிலை பதிவு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      உலகம்
france unprecedented record temperatures 2019 06 29

பாரீஸ் : ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. பிரான்சில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக பிரான்சில் நேற்று முன்தினம் வெப்ப நிலை உச்சபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. பிரான்சில் உள்ள வில்லிவியல் என்னும் கிராமத்தில்தான் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு சரியாக 45.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸில் அனல் காற்று வீசியது. அப்போது, 44.1 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அதுவே, பிரான்ஸில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து