முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் சுகாதார துறை குறித்த நிதி ஆயோக் கணக்கீடு தவறு - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் சுகாதாரத்துறையில் 9-வது இடத்திற்கு சென்றது குறித்து நிதி ஆயோக் கணக்கீடு தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டியுள்ளார்

மத்திய சுகாதார அமைச்சகத்தோடு இணைந்து, உலக வங்கியின் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்று, நிதி ஆயோக், நாடு முழுவதும் மக்களுக்கு கிடைக்கும் சுகாதாரத்துறையின் வசதிகள், நோய் எதிர்ப்பு சக்தி உள்பட 23 அம்சங்களின் அடிப்படையில் ஒரு சுகாதார தரவரிசை குறியீட்டு பட்டியலை வெளியிட்டது. இந்த தரவரிசையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆந்திராவும், 3-வது இடத்தில் மராட்டியமும் இருக்கிறது. கடந்த முறை 3-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

நிதி ஆயோக் கணக்கீடு தவறானது. 99 சதவீத தடுப்பூசி வழங்கி உள்ளோம், ஆனால் நிதி ஆயோக் 79 சதவீத என தவறான கணக்கை கொடுத்துள்ளது. 20 சதவீத பிரசவங்கள் வீட்டில் நடப்பதாக தவறான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்டி  கடிதம் எழுதியுள்ளோம். பட்டியலை மறுபரிசீலனை செய்ய நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து