முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. நாளை (ஜூலை 1-ம் தேதி) முதல் தங்களது பணியை தொடரலாம் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

அறிவுறுத்தல்...

இது குறித்துஅ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் தலைமைக் கழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் அனைவரும் ஜூலை 1-ம் தேதி முதல் தங்களுடைய பணியினை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிரேகா நியமனம்...

அ.தி.மு.க. செய்திதொடர்பாளராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சசிரேகா நியமிக்கப்படுகிறார். அவருக்கு அ.தி.மு.க.வினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

செய்தித் தொடர்பாளர்கள்...

இதைத் தொடர்ந்து ஏற்கனவே நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களின் பட்டியலையும் செல்போன் எண்களுடன் கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்விபரம் வருமாறு:-

சி.பொன்னையன், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளர்  98400-46677, 262661112. பா. வளர்மதி அ.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் தலைவர், தமிழ் நாடு பாடநூல் நிறுவனம் 94444-89003, 24742777, 2471505093, 821717013. கோகுல இந்திரா, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் 94440 66188, 044 - 2361400604577, 22661884. டாக்டர் வைகை செல்வன் செய்தித் தொடர்பாளர் மற்றும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் 94440 23262, 04566 220777, 9445175000.

நிர்மலா பெரியசாமி...

ஜே.சி.டிபிரபாகர், அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் 98410 14437, டாக்டர் கோ. சமரசம், செய்தித் தொடர்பாளர் 94430-58601, 9629537666, 04343 - 2526817. அழகுராஜ் (எ) மருது அழகுராஜ் செய்தித் தொடர்பாளர், 98840 13314, 99448 352938. கோவை செல்வராஜ், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் 99444 99991, 95008 99991. மகேஸ்வரி, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர், 94433 43434, 95003 4343410.  பாபு முருகவேல் செய்தித் தொடர்பாளர் 98411 51651, 044 - 2641165111. கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர்  99653 7772112. நிர்மலா பெரியசாமி, செய்தித் தொடர்பாளர் 94440 22299, 044-2446 56513. திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் அ.தி.மு.க. கலைப் பிரிவுத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் 9884747825, 2362436714. வழக்கறிஞர் சிவசங்கரி, செய்தித் தொடர்பாளர் 996251764415. வை. ஜவஹர் அலி  98400 23991, 4353990916. வழக்கறிஞர் சசிரேகாஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து