முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த எட்டு பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மின்சாரம் தாக்கி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த எட்டு  நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், வாள்வச்சகோஷ்டம் கிராமத்தில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த அப்பு மகன் வில்பிரட் உயர் மின் அழுத்த கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை  மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த தனகோட்டி மனைவி மாரியம்மாள் துணி உலர்த்தும் போது வீட்டின் அருகே இருந்த மின் கம்பியில் எதிர்பாராத விதமாக கைபட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், பைத்தந்துறை புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ரஞ்சித் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி, அத்திவெட்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் மகன் சந்திரன் மின்மாற்றியில் மின் இணைப்பு பணியின் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சென்னை மாவட்டம், வியாசர்பாடி, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த துரைவேல் மகன் வெங்கடேசன் கழிவு நீர் குழாய் சரிசெய்யும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், திசையன்விளை கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் செல்வன் கண்ணன் எதிர்பாராத விதமாக மின் கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வனவாசி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் மகன் சிறுவன் சரவண பாலாஜி விவசாய நிலத்திற்கு சென்ற போது பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைச்சுத்து உவரி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மனைவி பானுமதி முந்திரி தோட்டத்திற்கு சென்ற போது பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மின்சாரம் தாக்கி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த எட்டு  நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து