முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியும் - கோலியும் மிகச் சிறந்த ஆளுமைகள்: இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம்

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : டோனி-கோலி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

2-வது இடத்தில்...

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடிவுள்ளது. அதில் 5 போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. அத்துடன் ஒரு போட்டி மழையால் ரத்தானது. எனவே இந்திய அணி 11 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனினும் இந்தப் போட்டி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ஆகிய இரண்டிலும் இந்திய அணியின் பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக இந்தப் போட்டிகளில் டோனியின் ஆட்டம் குறித்து சச்சின், சேவாக் உள்ளிட்ட முன்னாள் விரர்கள் விமர்சித்திருந்தனர்.

மிகச் சிறந்த ஆளுமைகள்...

இந்நிலையில் டோனி மற்றும் விராட் கோலியின் உறவு குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,“டோனி மற்றும் கோலி ஆகிய இருவருமே மிகச் சிறந்த ஆளுமைகள். இவர்கள் இருவரும் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் சாம்பியன் வீரர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், “அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆட்டத்தை மாற்றுவது குறித்து டோனியிடம் ஆலோசித்துள்ளார். அத்துடன் இந்திய அணியின் வீரர்களிடமும் அணியின் மற்ற பயிற்சியாளர்களிடம் ரவி சாஸ்திரி அணியின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து