உலகக் கோப்பை: இந்திய வீரர் லோகேஷ் ராகுல் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      விளையாட்டு
 Lokesh Rahul 2019 06 30

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியின் போது இந்திய வீரர் லோகேஷ் ராகுல் இடுப்பு பகுதியில் காயமடைந்தார்.

பர்மிங்காமில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை லீக் போட்டி நடக்கிறது. இதில் இந்தியாவின் சகால் வீசிய 16-வது ஓவரின் 3-வது பந்தை இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் சிக்சருக்கு அனுப்பினார். எல்லை அருகே பீல்டிங் செய்த இந்தியாவின் லோகேஷ் ராகுல், உயர தாவி பந்தை பிடிக்க முயன்ற போது கீழே விழுந்தார். அப்போது இவரது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் முதலுதவிக்காக பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, மாற்று வீரராக பீல்டிங் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து