முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வாரசந்தை மைதானத்தில் நடைபெற்று வந்த கேளிக்கை ரங்கராட்டினத்தில் ராஜேந்திரன் (லேட்) மகன் செல்வன் விஷ்ணு தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், வேம்படிதாளம் குறுவட்டம், ஆட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபு மகன் செல்வன் உதயநிதி இரும்பு கேட் உடைந்து விழுந்து, பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டி கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விஷ வாயு தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

சென்னை மாவட்டம், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மனைவி மல்லிகா திடீரென வீசிய பலத்த காற்றில், அவரது வீட்டில் இருந்த ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட் உடைந்து விழுந்ததில், பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குப்பக்கவுண்டர் மகன் ஐயப்பன் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், கண்ணன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்  மகன் கிருஷ்ணன் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், மேல மூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன்  மகன் செல்வன் பாலமுருகன்  பள்ளி நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,   சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமணி மகன் மாரிதாஸ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேற்கண்ட பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து