முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கோவை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், கோயம்புத்தூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பைரோஜி பேகம் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12 நபர்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்னி வேனில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, 30.6.2019 அன்று அதிகாலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் வேன் ஓட்டுநர் ஷாஜஹான் (த.பெ. சம்சுத் கனி), அப்துல் மஜித் (லேட்) என்பவரின் மனைவி பைரோஜி பேகம்,  காதர் மொய்தீன் என்பவரின் மகன் செல்வன் ரியான், காதர் மொய்தீன் என்பவரின் மகள் செல்வி ஷெரின் மற்றும் சையது முஹம்மது என்பவரின் குழந்தை அப்னா பிர்ஜா ஆகிய ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயும், முஹம்மது நிசார் என்பவரின் மகன் செல்வன் மொகம்மது ரித்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சாலை விபத்தில் உயிரிழந்த மேற்கண்ட 6 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த சாலை விபத்து குறித்து அறிந்தவுடன் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும்  அமைச்சர்  எஸ்.பி வேலுமணிக்கும், கோயம்புத்தூர் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டேன்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்;  பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து