முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 உறுப்பினர்களை தேர்வு செய்ய, தமிழகத்தில் ராஜ்யசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் - தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 6 உறுப்பினர்களை தேர்வு செய்ய, தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இத்தகவலை தேர்தல் அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 8-ம் தேதியாகும்.

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல்

தமிழகத்தில் ராஜ்யசபை அ.தி.மு.க. உறுப்பினர்கள் மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரது பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி, தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தததை தொடர்ந்து தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வேட்பு மனுத்தாக்கல்

அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளாகும். 9-ம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் வரும் 11-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியிருந்தால் 18-ல் தேர்தல்

ஆறு பேருக்கு மேல் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும்பட்சத்தில் ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா 3 ராஜ்யசபா இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளராக உள்ள சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். சட்டசபை குழுக்களின் அறையில் இதற்கான வேட்புமனு பெறப்படும் என்று தெரிகிறது. தேர்தலுக்கான அறிவிக்கை இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் தமிழக சட்டசபையின் மானிய கூட்டத் தொடரும் இரண்டு நாள் விடுமுறைக்கு  பிறகு இன்று மீண்டும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து