உலகக்கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெற இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      விளையாட்டு
eng target india 2019 06 30

பர்மிங்காம் : உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பர்மிங்காமில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 160-ஐ எட்டிய போது ஜாசன் ராய் 66 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன்,  ஜோ ரூட் ,ஜோஸ் பட்லர், வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் விளையாடினர். 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 338 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி விளையாடியது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து