முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி உள்ளிட்டவை அரசின் சின்னங்களாக உள்ளன. இந்நிலையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக தமிழ் மறவன் பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம் உள்ளிட்ட சின்னங்களின் பட்டியலில் தற்போது பட்டாம் பூச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து